[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

தேடப்படும் குற்றவாளியாக மல்லையா அறிவிப்பு

court-declares-mallya-a-proclaimed-offender

தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக மும்பையில் உள்ள சட்ட விரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி பி.ஆர்.பாவ்கே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையின் மனுவை ஏற்பதாகவும், விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம், விஜய் மல்லையாவிற்கு சொந்தமான அனைத்து சொத்துகளை அமலாக்கத்துறையால் முடக்க முடியும். இதே போல், பிரிட்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவதற்கு நீதிமன்றத்தின் அறிவிப்பு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 82-வது பிரிவின் கீழ் விஜய் மல்லையாவை குற்றவாளியாக சேர்க்கக் கோரி அமலாக்கத்துறை சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close