[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

வேலையை விடும் ஊழியருக்கு 7 லட்சம் - ஆட்குறைப்பில் அமேசான் 

amazon-will-pay-workers-to-quit-and-start-their-own-delivery-businesses

பொருட்களை பேக்கேஜ் செய்யும் ஊழியர்கள் ராஜினாமா செய்தால் சுயத்தொழில் தொடங்க உதவுகிறோம் என அமேசான் தனது ஊழியர்களிடம் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் தற்போது உச்சத்தில் உள்ளது. யாரும் செல்ல முடியாத இடங்களிலும் சென்று பொருட்களை வழங்கி வருகிறது.  மற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து ஆன்லைன் விற்பனையில் இது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

இந்நிலையில் அமேசானில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு துரிதமாக பொருட்களை டெலிவரி செய்யும் நடவடிக்கையில் அமேசான் இறங்கியுள்ளது. அதற்காக, தற்போது பொருட்களை பேக்கேஜ் செய்யும் ஊழியர்களுக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. இந்த இ‌யந்திரங்கள் மூலம் மணிக்கு 700 பெட்டிகள் வரை பேக்கேஜ் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் உள்ள தங்கள் ஊழியர்களிடம் பணியை ராஜினாமா செய்தால், அமேசான் பொருட்களை விரைவாக டெலிவரி செய்யும் வகையில் சுயதொழில் தொடங்க உதவுவதாக அமேசான் தெரிவித்துள்ளது. 

இந்தத் திட்டத்தின்படி, வேலையை விடுவதற்கு ஒப்புக்கொள்ளும் ஊழியர்களுக்கு உதவித் தொகையாக 7 லட்சம் ரூபாயும், 3  மாத சம்பளமும் வழங்குவதாக அமேசான் தெரிவித்துள்ளது. விரைவான பேக்கேஜ், டெலிவரியின் புதிய முறை ஆகியவற்றால் பொருட்களை மிக விரைவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கலாம் என அமேசான் திட்டமிடுகிறது. அமேசானின் இந்த அறிவிப்பை ஏற்று பல ஊழியர்கள் வேலையை கைவிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close