[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

பங்கு சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக கடும் வீழ்ச்சி

nifty-and-sensex-continuously-down-in-six-day-in-india

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக கடுமையான சரிவுடன் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 487 புள்ளிகள் குறைந்து 37 ஆயிரத்து 789 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 138 புள்ளி குறைந்து 11 ஆயிரத்து 359 புள்ளியில் ‌வணிகத்தை முடித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் சுமார் 3.35% வரை குறைந்தன. 

சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்த நிலையும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ளதும் சந்தைகளின் சரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் கடந்தாண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தது. கடந்த ஜூலை மாதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மீண்டும் வரி அதிகரிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா வரியை அதிகரித்தது. இவ்வாறு வர்த்தகப்போர் தொடர்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close