[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

ஏப்.1 முதல் தொடங்கப்படும் கட்டுமான பணிகளுக்கு புதிய ஜிஎஸ்டி

gst-council-allows-builders-to-choose-between-2-tax-rates

கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டியை செலுத்துவதில் ஜிஎஸ்டி கவுன்சில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற 34ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.  கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஜிஎஸ்டி 12 லிருந்து 5 சதவிகிதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கு ஒரு சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதனை அமல்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

அதன்ப‌டி, பழைய வரி விகிதம் அல்லது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதம் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று‌ வரும் மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் கட்டுமானப் பணிகளுக்கு குறைவான புதிய ஜிஎஸ்டியே நடைமுறைப்படுத்தப்படும் என வருவாய்த்துறை செயல‌ர் பாண்டே தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கட்டுமானத்துறை நிறுவனங்கள், வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருப்பது புரட்சிகரமான நடவடிக்கை என்றும் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கையால் விற்காமல் தேக்கநிலையில் இருக்கும் வீடுகள் விற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தன

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close