[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பிஎஸ்என்எல் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்க அதிகாரிகள் ஆலோசனை

govt-tells-bsnl-to-look-at-options-including-closure

பிஎஸ்என்எல் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டு புத்துணர்வு கொடுக்க என்ன செய்யலாம்.. அல்லது நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராயுமாறு பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தன. அது மட்டுமில்லாமல் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் சரிவையே சந்திக்க ஆரம்பித்தது. கடந்த 2017-18 ஆண்டு இறுதிவரை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.31,287 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன், சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது நிறுவனத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டு புத்துயிர் கொடுக்க என்னவெல்லாம் செய்யலாம்..? நிறுவனத்தின் பங்கு முதலீட்டுகளை குறைக்கலாமா..? அல்லது முடியாதென்றால் நிறுவனத்தை மூடிவிடலாமா என்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் ஆராய பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி பிஎஸ்என்எல் சரிவடைய முக்கிய காரணமாக பார்க்கப்பட்டாலும் இதுதவிரவும் வேறு சில காரணங்கள் இருப்பதாக பிஎஸ்என்எல் கருதுகிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகப்படியான மூத்த மக்கள் வேலை செய்கின்றனர். எனவே அவர்களை குறைக்கவும் பிஎன்ஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு விஆர்எஸ் வழங்குவது அல்லது பணி ஓய்வு வயதை 60-லிருந்து 58 ஆக குறைக்கலாம் என்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம் எனவும் பிஎஸ்என்எல் கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close