[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

போஸ்ட் மேன்களுக்கு ஐபேட் மற்றும் ஸ்மார்ட்போன்கள்: மத்திய அரசு திட்டம்

cabinet-nod-for-india-post-payments-bank

நாடுமுழுவதும் 650 அஞ்சலக வங்கிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அஞ்சல வங்கிகள் தொடங்க பிரதமர் மோடி தலமையிலான அமைச்சரவைக் கூட்ட்த்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரூ.800 கோடி முதலீட்டில் 650 அஞ்சலக வங்கிகள் தொடங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நாடுமுழுவதும் 1.54 லட்சம் அஞ்சலங்கள் உள்ளன. அவற்றில் 1.34 லட்சம் அஞ்சலகங்கள் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதேபோல, கோர் பேங்கிங் எனப்படும் நெட்வொர்க் மூலம் இணைக்கப்பட்டுள்ள அஞ்சலகங்களின் எண்ணிக்கை, இதேவகையில் இணைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கிகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நகரப் பகுதிகளில் அமைந்துள்ள அஞ்சலகங்களில் பணிபுரியும் போஸ்ட் மேன்களுக்கு ஐபேட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close