[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ரூ.25,000-ஐ தாண்டியது ஒரு சவரன் ஆபரணத் தங்கம்..!

gold-price-increased

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமின் விலை 3,068 ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் தங்கம் கண்ட அதிகபட்ச விலையாக இருந்து வந்தது. பின்னர் அதன் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு ஜனவரியில் அது 2,402 ஆக சரிந்தது. இதுவே கடந்த 7 ஆண்டுகளில் தங்கத்தின் குறைந்த பட்ச விலையாகும். இடைப்பட்ட 4 ஆண்டுகளில் தங்கம் விலை கிராமுக்கு 666‌ ரூபாய் குறைந்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 8 ரூபாய் விலை அதிகரித்து 3 ஆயிரத்து 129 ரூபாய்க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 25 ஆயிரத்து 32 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 10 காசுகள் உயர்ந்து 43 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close