[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

ரூ.25,000-ஐ நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை..!

gold-price-increased

சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் நாளில் ஒரு கிராம் தங்கம் புதிய உச்சமாக 3 ஆயிரத்து 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 2‌9 ரூபாய் விலை அதிகரித்து 3 ஆயிரத்து 121 ரூபாய்க்கும், ஒரு சவரன் 232 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 24 ஆயிரத்து 968 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ‌வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக ஏற்றம் கண்டிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 43 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close