[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

கேம்பஸ் இண்டர்வியூ விவகாரம்: ஃபிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் அமேசான்

flipkart-s-rivals-call-out-to-iits

கேம்பஸ் இண்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய ஆர்வமுடன் இருப்பதாக இந்தியாவின் முன்னணி கல்வி நிலையங்களுக்கு இணையதள விற்பனையில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.

கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்த மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பணி வழங்குமாறு ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ஐஐஎம் அகமதாபாத் நிறுவனம் எச்சரிக்கைக் கடிதம் ஒன்றினை அனுப்பியது. இதையடுத்து கேம்பஸ் இண்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளைக் கடுமையாக்க வணிகம் தொடர்பான படிப்புகளை வழங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.

இந்தநிலையில், இந்தியாவின் 40 முன்னணி வணிகக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமேசான் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு குறித்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் மற்ற நிறுவனங்கள் தேர்வு செய்த மாணவர்களுக்குப் பணி வழங்கப்படாத சூழலில், அவர்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் பணி வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close