[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ரூ.399 ரீசார்ஜ் செய்தால் அதே அளவிலான தொகை பெறலாம்...! ஜியோ நியூ இயர் ஆஃபர்..!

jio-new-year-offer-2019

புத்தாண்டு சலுகையாக ஜியோ தொலைபேசி நிறுவனம் 399 ரூபாய் ரீசார்ஜுக்கு அதே அளவு தொகையை திரும்பப் பெறலாம் என அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் ரிலையன்ஸ் ஜியோ கால்வைத்தது முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செல்வாக்குகள் ஆட்டம் கண்டன. குறைவான விலையில் அதிக டேட்டா, ப்ரீ கால் வசதி உள்ளிட்டவைகள் ஜியோவின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது. மற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக சலுகையை அறிவித்தாலும் ஜியோவை முந்த முடியவில்லை.

தற்போது புத்தாண்டு பிறக்க உள்ளதையொட்டி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோவின் பழைய வாடிக்கையாளர்கள் அல்லது புதிதாக ஜியோ சேவையை பெற உள்ளவர்கள் யார் வேண்டுமானலும் ரூபாய் 399 ரீசார்ஜ் செய்தால், அதே அளவிலான தொகை ஏஜியோ செயலியில் கூப்பன்களாக வரவு வைக்கப்படும்.

அதைப் பயன்படுத்தி ஏஜியோ ஆன்லைன் ஷாப்பிங் இணைய தளத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கி, 399 ரூபாய்க்கு சலுகை பெறலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. டிசம்பர் 28-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையை பெறலாம். அதேசமயம் ஏஜியோவில் வரவழைக்கப்படும் 399 ரூபாயை 2019-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதிக்குள் நாம் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஜியோவில் 399 ரூபாய் பிளான் பெரும்பாலானோர் விரும்பும் பிளானாக உள்ளது. இத்திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வீதம் 126 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் அன் லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 மெசேஜ் இலவசம் என வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதிகள் உள்ளன. எனவே இத்திட்டத்திலேயே புத்தாண்டு சலுகை திட்டத்தையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close