ஆன்லைனில் விற்கப்படும் ஐந்தில் ஒரு பொருள் போலியானது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் விற்பனை தொடர்பாக LOCAL CIRCLES என்ற இணையதளம் சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருள்கள் தங்களிடம் விற்கப்பட்டதாக 20 சதவிகித வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த ஆன்லைன் நிறுவனங்கள் அதிகளவில் போலி பொருட்களை விற்பனை செய்கின்றன என்ற கேள்விக்கு ஸ்னாப்டீல் என 37 சதவிகிதம் பேரும், பிளிப்கார்ட் என 22 சதவிகிதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். 20 சதவிகிதம் பேர் அமேசான் நிறுவனம் போலியான பொருட்களை விற்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நறுமண மற்றும் ஒப்பனை பொருட்கள், விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பைகள் ஆகியவை தான் போலியானவையாக இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது போலியான பொருட்களை வழங்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..!
விடா முயற்சி, தன்னம்பிக்கை ! யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று