[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

விஜய் மல்லையாவின் ரூ.9,000 கோடி சொத்துக்கள் முடக்கப்படுகிறது

money-laundering-case-ed-to-attach-vijay-mallya-s-india-assets-worth-rs-9000-crore

விஜய் மல்லையாவின் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மத்திய அமலாக்கத் துறை முடக்க உள்ளது. மல்லையா மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் இதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும் அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முடக்கப்பட உள்ள சொத்துக்களின் மதிப்பும் மல்லையா வங்கிகளுக்கு திரும்பத் தர வேண்டிய கடன் தொகையும் ஏறக்குறைய சமம் என்பதையும் அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

மல்லையாவுக‌கு சொந்தமான சொகுசு வீடுகள், விலையுயர்ந்த கார்கள், நிறுவன பங்குகள் உள்ளிட்ட வகையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாக கூறிய இங்கிலாந்து அரசு மாற்றுவழிகளில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close