[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

இன்று அட்சய திருதியை: 10 ஆண்டுகளில் வெள்ளியின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..

akshaya-tritiya-2016-silver-price

அட்சய திருதியை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தங்கம் உள்ளிட்ட ஆபரணப் பொருட்கள் வாங்குவதற்கு உகந்த நாளாக இன்றைய தினம் கருதப்படுகிறது. இந்நிலையில், வெள்ளியின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்...

வெள்ளை உலோகமான வெள்ளி சில்லறை விற்பனையில், ஒரு கிராம் விலை, 2006-ம் ஆண்டு 22 ரூபாய் சொச்சம் என இருந்தது. இது அடுத்த ஆண்டு சற்றே குறைந்து 20 ரூபாய் 60 காசு என மாற்றம் கண்டது.

வெள்ளியைப் பொறுத்தவரை, பல்வேறு ஆபரணங்கள், பூஜையறைத் தேவைகள் தவிர, முதலீடாக கருதி வெள்ளி வாங்குவதும் இந்த நேரத்தில் அதிகரித்தது. இதனால், 2008-ல் 1 கிராம் வெள்ளி, 24 ரூபாய் 60 காசுகள் என உயர்ந்தது. 2009-ம் ஆண்டு அட்சய திருதியை நாளில், இது 24 ரூபாய் 35 காசுகள் என இருந்தது.

எலெக்டரானிக்ஸ், சிறப்புவகை பெயின்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையில் வெள்ளிக்கும் பங்கு உண்டு என்பதால், அந்த துறைகள் சுறுசுறுப்பு அடையும்போது, வெள்ளியின் விலை ஏறும் என்பது கடந்த கால அனுபவம்.

அத்தகைய சூழல் மீண்டும் வந்ததால், 2010-ம் ஆண்டு, 32 ரூபாய் 65 காசுகள் என்ற நிலைக்கு உயர்ந்த 1 கிராம் வெள்ளி, 2011-ம் ஆண்டு ஒரேயடியாக அசுர வேகத்தில் 58 ரூபாய் 35 காசுகளை எட்டியது. எனினும், 2012-ம் ஆண்டு அட்சய திருதியை நாளில், ஏற்றத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டு, 60 ரூபாய் 20 காசுகள் என்ற நிலையை எட்டியது.

இடைப்பட்ட நாளில், சர்வதேச நடப்புகளின் பாதிப்புகளால், வெள்ளி விலையும் சரிந்தது. அதனால், 2013-ம் ஆண்டின் சுப நாளில் இது, 48 ரூபாய் 30 காசுகள் என்ற நிலையைத் தொட்டது. இந்த நேரத்தில், சர்வதேச அளவில் காணப்பட்ட தொழில் தேக்கத்தால், ஆலைகளின் தேவையும் குறைய, 2014-ல் இது 44 ரூபாய் 10 காசுகளுக்கும், 2015-ம் ஆண்டு 39 ரூபாய் 10 காசுகளுக்கும் கிடைத்தது.

அடுத்து வந்த நாட்களில், அமெரிக்க டாலர் மதிப்பில் மாற்றம் உள்ளிட்ட பிற காரணிகள், வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் பலனாய், இன்றைய அட்சய திருதியை நாளில் அதன் விலை சற்று உயர்ந்து 44 முதல் 45 ரூபாய்க்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close