[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

இன்று அட்சய திருதியை: 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..

akshaya-tritiya

கடந்த 10 ஆண்டுகளில் அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை நிலவரம்..

ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 2006-ம் அட்சய திருதியை நாளில் வெறும் 897 ரூபாய்தான். இது அடுத்த ஆண்டில், இன்னும் குறைந்து 870 ரூபாய் என்ற அளவையும் தொட்டது. ஆனால், அப்போது, அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிச் சிக்கலால் பல வங்கிகள் திவால் என, அதிர்ச்சி சம்பவங்கள் தொடர்ந்தன.

இவையெல்லாம் சேர்ந்து கொண்டு நெருப்பு வைக்க, தங்கத்தின் சர்வதேச சந்தை விலை - தீபாவளி ராக்கெட் பட்டாசு போல, சரசரவென உயர்ந்தது. 2008-ம் ஆண்டு அட்சய திருதியை நாளில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆயிரத்து 89 ரூபாய் என, 4 இலக்க எண்ணை, முதன்முறை தொட்டது.

அடுத்த ஆண்டு 2009-லேயே அது, 1,381-ஐத் தொட, 2010-ல் 1,696 ரூபாய் என தொடர் ஓட்டம்தான். 2011-ம் ஆண்டு, அட்சய திருதியை நாளில் அது, 2,000 ரூபாய் என்ற, அடுத்த முக்கிய எல்லையைத் தாண்டி முன்னேறி, 2,032 ரூபாய்க்கு கிடைத்தது.

இந்நிலையில், பாழ்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்க, அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகள், அது சர்வதேச செலாவணி சந்தையில் ஏற்படுத்திய பாதிப்புகள் என சேர்ந்து கொண்டு, அடுத்த ஆண்டு அட்ச திருதை நாளில், ஆபரணத் தங்கம் 2,717 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்தது. எனினும், இடையில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பல்வேறு அதிர்வுகளுக்கும் ஈடுகொடுத்து, ஊஞ்சலாட்டத்தில் இருந்த மஞ்சள் உலோகம் 2013-ம் ஆண்டு 2,543 என்ற அளவுக்கு இறங்கியது.

ஆனால், இது தற்காலிகமானது என்பது போல, அடுத்த ஆண்டே இது, 2,800 ரூபாய் என முன்னேற்றம் காட்டியது. அதன்பின், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நிதிக் கொள்கையில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை ஒட்டி, மீண்டும் ஊஞ்சலாட்டத்துக்குச் சென்ற தங்கத்தின் விலை, கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் 2,537 ரூபாய் என சற்றே குறைந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close