[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் எவ்வளவு: உடனடியாக தெரிவிக்குமாறு விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

sc-shares-details-of-vijay-mallya-s-assets-with-banks

தன் பெயரிலும்,மனைவி மற்றும் 3 குழந்தைகள், உள்ளிட்ட குடும்பத்தினர் பெயரிலும் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துகள் குறித்த முழு தகவலையும், மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா நீதிமன்றத்துக்கும், கடன்கொடுத்த வங்கிகளுக்கும் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

சீலிட்ட கவரில், மல்லையா சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அவரது உள்நாட்டு சொத்துகள் அடங்கிய பட்டியலையும், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகள் கொண்ட குழுவிடம் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மறுபுறம், இந்த தகவலைக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை 2 மாதங்களுக்குள் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என வங்கிகளுக்கும் அது உத்தரவிடப்பட்டுள்ளது.

9 ஆயிரம் கோடிக்கும் அதிக கடன் பாக்கி வைத்துள்ள மல்லையா, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வங்கிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், 6 ஆயிரத்து 868 கோடி ரூபாய் வரை திருப்பிச் செலுத்த முன்வந்ததாக தெரிகிறது. ஆனால், இது தொடர்பான விவரங்களை அவர் நேரில் வந்து பேச வேண்டும் எனவும், முதல் தவணையாக 6 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக டெப்பாசிட் செய்ய வேண்டும் எனவும் வங்கிகள் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், தனது வெளிநாட்டு சொத்துகள் குறித்த தகவலை வங்கிகளுக்கு தர முடியாது என விஜய் மல்லையா கூறி வருவதாக ஏற்கனவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close