[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

வந்தாச்சு “வாட்ஸ்அப் பிசினஸ்”செயலி!

whatsapp-business-app

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இல்லை. மெசேஜ், டாக்குமெண்ட், வீடியோ காலிங், பேமண்ட் என பல விஷயங்கள் இருக்கிறது என்றாலும் பிசினஸ் செய்பவர்களும் வாட்ஸ்அப்பை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறார்கள். நிறைய பிசினஸ்கள் வாட்ஸ்அப் மூலம்தான் இயங்கி வருகிறது என்கிற விஷயத்தை தெரிந்துகொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் “பிசினஸ் வாட்ஸ்அப்” என்கிற புதிய செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

டவுன்லோடு செய்வது எப்படி?

கூகுள் “பிளேஸ்டோர்” க்கு சென்று whatsapp business என்று டைப் செய்தால் செயலியின் விவரம் வரும், இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

இதன் பயன்பாடு என்ன?

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யும் வசதியும், வாடிக்கையாளர்களை தனித்தனியாக பிரித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. நிறுவனத்தின் விவரங்களையும், வரைபடத்தையும் Profile யில் பதிவு செய்துகொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களை எளிதில் கவர முடியும்.வாடிக்கையாளர்களுக்கு உடனடி பதில்களும், வாழ்த்துச் செய்திகளையும் அனுப்பலாம். பிசியாக இருந்தால் “Away” மெசேஜ் அனுப்பும் வசதியும் இருக்கிறது.

அதே நம்பரில் பயன்படுத்த முடியுமா?.

ஏற்கனவே வாட்ஸ்அப் மெசன்ஜரை பயன்படுத்துபவர்களாக இருந்தால், அதே நம்பரில் பிசினஸ் வாட்ஸ்அப்பை இணைத்துக்கொள்ளலாம். மெசன்ஜரில் இருக்கும் பழைய மேசேஜ்களை பேக்அப் செய்துகொண்டு வாட்ஸ்அப் பிசினஸ் ஆக்டிவேட் செய்துகொள்வது சிறந்த வழி. 
பிசினஸையும், குடும்பத்தையும் ஒரே செயலியில் பயன்படுத்திக்கொள்ளும் வசதிதான் இந்த பிசினஸ் வாட்ஸ்அப். இந்தியாவில் 80% சிறிய பிசினஸ் வெற்றிக்கு வாட்ஸ்அப் செயலி அதிகமாக பயன்படுகிறது என்று Morning Consult study சர்வேவும் ஒருபக்கம் சொல்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close