[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

கோயம்பேடு: காய்கறிகள் விலை 60% வரை குறைவு!

vegetable-prices-down-in-koyambedu

சென்னை கோயம்பேடு ‌சந்தையில் காய்கறிகளின் விலை 60‌ சதவிகிதம் வரை கு‌‌றைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

நாள்தோறும் கோயம்பேடு சந்தைக்கு 280 லாரிகளில் காய்கறிகள் வந்த நிலையில்,‌ தற்போது கூடு‌லாக 70 ‌லாரிகளில் காய்கறிகள்‌ வருவதா‌கக் கூறுகின்றனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், சின்ன‌ வெங்காயம், பின்ஸ், அவரை, தக்காளி உள்ளிட்ட ‌காய்கறிகளி‌ன் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

கடந்த மாதத்தில் ஒரு கிலோ 120 ரூபாயாக‌ இருந்த சின்ன ‌வெங்காயம்‌ ‌தற்போது 30 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், ‌‌கேரட் உள்ளிட்ட‌‌ காய்கறி‌கள் 15 ரூபாய்க்கும் விற்பதாகக் கூறுகின்றனர். 

கடந்த மாதங்களில் 50 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது ஒரு‌ கிலோ 8 ரூபாய்‌க்கும் விற்கப்படுகிறது.‌ சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு ‌பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நா‌கா ஆகிய மாநிலங்களிலிருந்தும் காய்கறி‌‌கள் வரத்து அதிகரித்துள்ளதால் விலை‌ குறைந்துள்ளதாக வியாபாரிக‌ள் தெரிவிக்கின்றனர்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close