[X] Close
JUST IN
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
 • BREAKING-NEWS கோவில்பட்டியில் பாலத்தின் மீது வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
 • BREAKING-NEWS சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞருமான எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்- மம்தா பனர்ஜி
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போரட்டம் 23 ஆவது நாளாக தொடர்கிறது
வணிகம் 04 Jan, 2018 01:06 PM

அதிரடி விலைக்குறைப்பில் ஃப்ளிப்கார்ட்டின் ‘மொபைல் போனான்ஸா சேல்’

flipkart-s-mobile-bonanza-sale

புகழ்பெற்ற ஷாப்பிங் இணையதளமான ஃப்ளிப்கார்ட், ‘மொபைல் போனான்ஸா சேல்’ என்ற பெயரில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ள ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே  ஸ்மார்ட்ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்பனையை துவக்கியுள்ளது. ‘மொபைல் போனான்ஸா சேல்’ என்று அழைக்கப்படும் இந்த ஆன்லைன் விற்பனை திட்டம் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆப்பிள் ஐஃபோன், கூகுஸ் பிக்ஸெல் உள்ளிட்ட பல ஸ்மார்ட்ஃபோன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிறந்த ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்களான சாம்சாங், ஓப்போ, மோட்ரல்லா போன்றவற்றின் மொபைல் ஃபோன்களும் இடம்பெற்றுள்ளன.

ஃப்ளிப்கார்டின் இந்த சேலில், ஆப்பிள் ஐபோன் 8-ன் விலை 54,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 64 ஜிபி ஸ்டோரெஜ் உள்ள இந்த ஃபோனின் விலை 64,000 ரூபாய் ஆகும். ஆனால் ஃபிளிப்கார்டின் தள்ளுபடி விலையில் 17 சதவீதம் விலை குறைக்கப்பட்டு ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 64 ஜிபி ஸ்டோரெஜில் ரூ.12,999-க்கு விற்பனையாகும் ரெட்மி நோட் 4, ஃப்ளிப்கார்டின் மொபைல் போனான்ஸா சேலில் 10,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சாங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ஃபோனின் விலை 17,900 ரூபாயில் இருந்து 33 சதவீத விலை குறைப்பில் ரூ.11,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களின் விலைகள் அதிரடியான விலைக் குறைப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ஆரம்பமான ஃப்ளிப்கார்டின் இந்த அதிரடி சேல் வாடிக்கையாளர்களிடம் அதிக கவனத்தை பெற்று வி்ற்பனை ஆகி வருவதாக தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close