[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வாடிக்கையாளர்களுக்கு 5 புதிய ஆஃபர்களை அறிவித்துள்ள வோடஃபோன் 

vodafone-announces-5-new-offers-to-customers

வோடஃபோன் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களில் 5 புதிய ஆஃபர்களை அறிவித்துள்ளது.
 
ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு தரும் அதிரடியான பல சலுகைகளை தொடர்ந்து, ஏர்டெல், ஐடியா, ஏர்செல் போன்ற மொபைல் நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்களில் பல மாற்றங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது வோடாஃபோன் நிறுவனமும் களத்தில் குதித்து உள்ளது. இதன்படி வோடஃபோனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, 100 இலவச குறுங்தகவல், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபர், ஆகியவற்றை 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ரூ.458-க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன், 100 இலவச குறுந்தகவல், அன்லிமிடெட் வாய்ஸ் ஆஃபரை 70 நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

அதேபோல் ரூ.347-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும்  நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு பெற முடியும். ரூ.199-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கும், ரூ.79-க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கும் இந்த ஆஃபரை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வோடாஃபோனின் இந்த சலுகை திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close