[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம்

liquor-baron-vijay-mallya-s-passport-suspended-for-four-weeks

இந்திய வங்கிகளிடம் இருந்து 9000 கோடி கடன் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.

ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக மும்பை அலுவலகத்தில் கடந்த மாதம் 18–ந்தேதி நேரில் ஆஜராகுமாறு மல்லையாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அன்றைக்கு மல்லையா ஆஜராகாததால், கடந்த 2ம்ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் தான் ஏற்கனவே ஒப்பு கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால், இந்த விசாரணையை மே மாதத்ற்கு ஒத்தி வைக்க வேண்டும் என விஜய் மல்லையா கேட்டார்.. இதை நிராகரித்த விசாரணை அதிகாரி கடந்த ஏப். 9ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகுமாறு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பினார்.

ஆனால் இந்த முறையும் மல்லையா நேரில் ஆஜராகவில்லை. இதற்கு பதில் அனுப்பிய விஜய் மல்லையா வங்கிகளில் நான் பெற்ற கடனை திருப்பி செலுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கிறது எனவே அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராக இயலாது என்று விசாரணை அதிகாரிக்கு தெரிவித்தார்.

இந்நிலையில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே சம்மன் அனுப்ப முடியும் இதில் அவர் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இதனையடுத்து 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை நான்கு வாரங்களுக்கு முடக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்தியா கோரிக்கை வைத்தால் லண்டனில் இருந்து விஜய் மல்லையா இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது விஜய் மல்லையாவிற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close