[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

புதிய கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் மல்லையா

vijay-mallya-says-he-paid-usd-100-to-acquire-cpl-franchise

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பாக்கி வைத்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, கரீபியன் பீரிமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் BARBADOS TRIDENTS அணியை விலைக்கு வாங்கியுள்ளார்.

இது‌குறித்து கருத்து தெரிவித்த விஜய் மல்லையா, இந்திய மதிப்பில் சுமார் 6 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே இதற்காக செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த அணியின் மதிப்பு சுமார் 130 கோடி ரூபாய் ‌உள்ள நிலையில், தம்மையும் பங்குதாரராக இணைத்துக் கொள்ள மற்ற உ‌ரிமையாளர்கள் சம்மதித்தாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது நிலை குறித்து பார்படோஸ் பிரதமரிடம் தெரிவித்ததையடுத்து, TRIDENTS அணிக்கு அரசு மானியம் வழங்க அவர் சம்மதித்ததாகவும் மல்லையா குறிப்பிட்டுள்ளார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகியதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பார்படோஸ் அணியின் பங்குதாரர் ஆகியிருப்பதாகவும் மல்லையா கூறியுள்ளார். இதேபோல் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் கரீபியன் பீரிமியர் லீக்கில் ஒரு அணியின் உரிமையாளர் ஆகியுள்ளார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close