[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

விஜய் மல்லையாவின் வாக்குறுதியை நிராகரித்த வங்கிகள் கூட்டமைப்பு

banks-have-finally-shown-some-guts-by-rejecting-vijay-mallya-s-rs-4000-crore-offer

மொத்த கடன் பாக்கியில் 4 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பச் செலுத்த முன்வந்த விஜய் மல்லையாவின் வாக்குறுதியை வங்கிகள் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கியைத் திரும்பச் செலுத்த உத்தரவிடக் கோரி, பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன் மீதான விசாரணையின்போது, முதல்கட்டமாக செப்டம்பர் மாதத்துக்குள் 4 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த மல்லையா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மல்லையாவின் வாக்குறுதியை நிராகரிப்பதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்த புதிய திட்டத்தை சமர்ப்பிக்க கிங்ஃபிஷர் நிறுவனத் தரப்பில் இரண்டு வார காலஅவகாசம் கேட்கப்பட்டது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மல்லையா தனது சொத்துகள், மனைவி மற்றும் வாரிசுகளின் சொத்துகள் விவரத்தை வருகிற 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில், நீதிமன்றத்தில் கணிசமான தொகையை டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த கட்ட விசாரணையை 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மல்லையா எப்போது திரும்பி வருகிறார் என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close