[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!

airtel-offers-iphone-7-at-a-down-payment-of-rs-7-777-but-is-it-a-good-deal

ஏர்டெல் மூலம் ஐஃபோன் 7 வாங்க முதல் தவணையாக ரூ.7,777 செலுத்தினால் போதும் என்ற புதிய ஆஃபர் வெளியாகியுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம், 32 ஜிபி ஐஃபோன் 7 ஃபோனை ரூ.7,777-ஐ முதல் தவணையாக செலுத்தி வாங்கும் ஆஃபரை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் வாடிக்கையாளர்கள் எளிமையாக செலுத்தும் மாதாந்திர தவணை முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் முதல் தவணையாக ரூ.7,777 செலுத்தியவுடன் 24 மாதங்களில் மீதமுள்ள தொகையை மாதம் ரூ.2,499 வீதம் கட்டலாம். ஏர்டெல் மூலம் வாங்கும் இந்த போனில் மாதம் 30 ஜிபி டேட்டா, அன்லிமிட்டேட் (லோக்கல், எஸ்.டி.டி, ரோமிங்) அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனம், ஆப்பிள், ஹெச்.டி.எஃப்.சி, கிளிஸ் கேபிடல், சென்ஸ் டெக்னாலஜிஸ், பிரைட் ஸ்டார் டெலிகம்யூனிகேஷன்ஸ் மற்றும் வுல்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த ஆஃபரை அறிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்கள் ஏர்டெல் இணையதளத்திலேயே விவரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close