[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம்!!

water-bottle-cost-rs-65-lakh

தண்ணீர் பாட்டில் ஒன்றின் விலை ரூ.65 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி பிவர்லி ஹில்ஸ் ட்ரிங்க் (The Beverly Hills Drink) என்ற நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 (Beverly Hills 9OH2O) என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம். அப்படி என்ன அந்த தண்ணீரில் விசேஷம்?

இந்த பாட்டிலில் நிரப்பப்படும் தண்ணீர் தெற்கு கலிபோர்னியானியாவின் மலையின் 5000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்படுகிறதாம். இந்த தண்ணீர்தான் உலகின் சுத்தமான நீராக கருதப்படுகிறது. இந்த தண்ணீர் அதிக சுவையானதாகவும், மென்மையானதாகவும், நம்பமுடியாத அளவு மிருதுவானதாகவும் இருக்கும் என்கிறனர் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள். 

பிவர்லி ஹில்ஸ் ட்ரிங்க் நிறுவன தலைவர் ஜான் க்ளூக், இந்த குடிநீர் பாட்டிலின் மூடியில் 600 சிறிய வெள்ளை நிற வைர கற்கள் மற்றும் 250 கருப்பு வைர கற்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் இதோடு மலையிலிருந்து எடுக்கப்பட்ட ஒருவருடத்துக்கான தண்ணீரும் இந்த  பாட்டிலை வாங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close