[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

ஏறுமுகத்தில் பெட்ரோல் விலை: இரண்டு மாதத்தில் ரூ.7.51 உயர்ந்தது

petrol-price-cost-to-rs-7-51-in-two-months

கடந்த ஜூலை மாதம் முதல் பெட்ரோலின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜூலை 1 ஆம் தேதி முதல் இன்று வரை பெட்ரோலின் விலை 7 ரூபாய் 51 காசு அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 65 ரூபாய் 46 காசாக இருந்தது. ஆனால் அது ஆகஸ்ட் 1 ஆம் தேதி 2 ரூபாய் 25 காசு உயர்ந்து 67 ரூபாய் 71 காசாக விற்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் பெட்ரோல் விலை ‌கணிசமாக அதிகரித்துக் கொண்டே வந்தது. செப்டம்பர் 1 ஆம் தேதி 71 ரூபாய் 78 காசாக இருந்த பெட்ரோலின் விலை இன்று 72 ரூபாய் 97 காசாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோலின் விலை 7 ரூபாய் 51 காசு அதிகரித்திருப்பது பொருளாதார சுமையை ஏற்படுத்த‌வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் அரசிற்கு எதிரான விமர்சனங்கள் கிளப்பியுள்ளது.

 இதுகுறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையில் தலையிடும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு தற்காலிகமானதே என்றும் இது தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுவதாகவும் அமைச்சர் பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close