[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நினைவேந்தல் என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல்துறை
  • BREAKING-NEWS கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார் - குமாரசாமி
  • BREAKING-NEWS கர்நாடக மாநில முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி மே 21ஆம் தேதி பதவியேற்கிறார்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS லண்டனில் பிரிட்டன் இளவரசர் ஹாரி - நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது
  • BREAKING-NEWS கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்

வாவ்: ஜியோவுக்கு 13 கோடி வாடிக்கையாளர்கள்

reliance-jio-celebrates-first-anniversary

வெளிவந்த ஓராண்டிலே தொலைத்தொடர்பு துறையில் தடம் பதித்த ஜியோ மாபெரும் புரட்சி செய்துள்ளது. 

ஜியோவுடன் போட்டிப்போட முடியாத வோடாஃபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் புதிய ஆஃபர்களை அறிவித்தும் மந்த நிலையிலே உள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கிய ஜியோ 4ஜி சேவையை தொடங்கி முதல் வருட நிறைவில் 130 மில்லியன் அதாவது 13 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக முகேஸ் அம்பானி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 


அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஜியோவின் புரட்சி இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். டிராய் நிலவரப்படி ஜியோ தற்போது 13 கோடி வாடிக்கையாளர்களை எட்டியிருப்பதாக அம்பானி குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் மொபைல் டேட்டா பயன்பாட்டில் 155 வது இடத்திலிருந்த இந்தியா, ஜியோவின் வருகைக்கு பின் உலகின் முதல் இடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜியோ, 4ஜி இலவச சேவையை தொடங்கி அதன்பின் சலுகை விலையில் டேட்டா, மலிவு விலை செல்போன் என பல்வேறு துறைகளில் கால்பதித்தது. விரைவில் பிராட்பேண்ட், ஃபைபர் கேபிள் சேவையை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close