[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமலேயே வங்கியை மாற்றும் புதிய திட்டம் 

change-the-bank-without-changing-the-bank-account-number

வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமலேயே வங்கியை மாற்றும் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

செல்போன் சேவை பெறும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு சேவை அளிக்கும் நிறுவனத்தின் மீது அதிருப்தி ஏற்பட்டால் செல்போன் எண்ணை மாற்றாமலேயே வேறு நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளும் திட்டம் தற்போது அமலில் இருக்கிறது. மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (Mobile Number Portability) என்று இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. அதேபோல, வங்கிகளும் அக்கவுண்ட் நம்பர் போர்ட்டபிலிட்டி (Account Number Portability) சேவையைத் தொடங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா, வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவில் வங்கிகள் இடையே ஆரோக்கியமான போட்டி மற்றும் சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆதார் எண் இணைப்பு போன்றவை இந்த திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர உதவும் என்று முந்த்ரா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வங்கிகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close