[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தம்

2000-rupees-notes-printing-as-been-stopped-by-mysore-press

ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. 

ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.7.4 டிரில்லியன் மதிப்பிலான 3.7 பில்லியன் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு தட்டுப்பாட்டை போக்குவதற்காக அவசர அவசரமாக இவை அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, ஜூலை 14 வரை ரூ.15.22 டிரில்லியன் அளலான பணம் புழக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன. கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close