[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
  • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
  • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
  • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
  • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
  • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
வணிகம் 14 Jul, 2017 08:51 AM

பழைய தங்க நகைகள், டூவீலர், கார்கள் விற்பனைக்கு ஜி.எஸ்.டி. இல்லை

gst-exemption-for-sale-of-old-jewels-bike-and-cars

 

பழைய தங்க நகைகள், பைக், கார் உள்ளிட்டவற்றை மக்கள் விற்பனை செய்தால் அதற்கு ஜி.எஸ்.டி. வரி ஏதும் விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

பழைய தங்க நகைகள், பைக், கார் ஆகியவற்றின் விற்பனைக்கு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படும் என செய்திகள் பரவிய நிலையில் இந்த விளக்கத்தை மத்திய வருவாய்துறை அளித்துள்ளது. 

இது குறித்து மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், “மக்கள்  தங்களின் பழைய தங்க நகைகளை, நகைக்கடைக்காரரிடம் விற்பனை செய்யும் போது, நகைக்கான 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது. ஏனென்றால், தனி மனிதர்கள் தொழில்முறை வர்த்தகமாக பழைய தங்கநகைகளை விற்பனை செய்யவில்லை. சுயதேவைக்காக மட்டுமே தங்க நகைகளை விற்பனை செய்கிறார்கள். ஆதலால், ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது” என்று கூறியுள்ளார்.  


ஆனால், ரிவர்ஸ் சார்ஜ் விதிகளின்படி, தனி நபர்களிடம் இருந்து பழைய தங்க நகைகளை வாங்கும் தங்க நகைக்கடைக்காரர் ஜி.எஸ்.டி. வரி 3 சதவீதத்தை செலுத்த வேண்டும். இதே நடைமுறையே பழைய கார், பைக் ஆகியவற்றை விற்பனை செய்யும் போதும் பின்பற்றப்படும் என்று தல்கவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close