[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

ரூ.399-க்கு 84 ஜிபி டேட்டா: ஜியோவின் தன் தனாதன் ஆஃபர்..!

reliance-jio-s-new-dhan-dhana-dhan-prepaid-postpaid-plans-84gb-data-at-rs-399-and-more

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ‘தன் தனாதன் ஆஃபர்’ மேலும் அதிக சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ‘தன் தனாதன் ஆபர்’ என்ற சலுகையை வழங்கிவந்தது. அந்த ஆபர் இப்போது மேலும் சலுகைகளோடு வேலிடிட்டியும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.349, ரூ.399, ரூ.509 ஆகிய பிளான்களுக்கு அதிகமான 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 20 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். இந்த பிளானுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி உள்ளது. இதற்கு தினசரி பயன்பாட்டு அளவு கிடையாது. 20 ஜிபி காலியானாலும் 128 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவைப் பயன்படுத்த முடியும். ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த பிளானில் மொத்தமாக 84 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதில் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ் அனைத்தும் இலவசம். ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாள் வேலிடிட்டியுடன் 112 ஜிபி பயன்படுத்தலாம். இதைவிட அதிக தொகைகளில் உள்ள பிளான்களில் எந்த மாற்றமும் இல்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close