[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
 • BREAKING-NEWS அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியை காணவில்லை என போலீசில் புகார்
 • BREAKING-NEWS ரிசார்ட்ஸில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ விளக்கம்
 • BREAKING-NEWS ரூ. 200 நோட்டுக்கான மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி; நாளை முதல் புழக்கத்திற்கு வரும்
 • BREAKING-NEWS ரூ.1500 ஜியோ போனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடக்கம்
 • BREAKING-NEWS சமூகநீதியை தடுக்கவே நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
 • BREAKING-NEWS அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை: அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
 • BREAKING-NEWS ’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
 • BREAKING-NEWS தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும்: செங்கோட்டையன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS விவேகம் படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
 • BREAKING-NEWS ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?
வணிகம் 26 Jun, 2017 09:44 AM

கடன்சுமையால் கஷ்டப்பட்டு பறக்கும் ஏர்-இந்தியா விமானங்கள்

air-india-debt-burden

கடுமையான கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஏர்-இந்தியா தனியார் மையமாக பைலட்கள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. 

நஷ்டத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் முதன்மையானதாக கருதப்படுவது ஏர்-இந்தியா நிறுவனமாகும். கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர்-இந்தியா 2012ம் ஆண்டு முதல் தனது ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்பில் இறங்கியது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வேறு வழியில்லாமல் சம்பளத்தை குறைத்துக்கொண்டு பணிப்புரியத் தொடங்கினர். இந்நிலையில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக ஊதியம் கொடுப்பதையே ஒரு கட்டத்தில் நிறுத்தியது ஏர்-இந்தியா நிறுவனம். இதனால் செய்வதறியாமல் தவித்த ஊழியர்களும், விமானிகளும் பலமுறை வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமீபகாலமாக தனியாருக்கு ஏர்-இந்தியாவை தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்களும், விமானிகளும் பின்னர் தனியாரிடம் இருந்தால் ஊதிய பிரச்சனை இருக்காது என்றும், பல மாற்றங்கள் மூலமாக நிறுவனத்தின் வருவாயை கூடும் என்பதால் தற்போது இத்திட்டத்தை அவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள ஊதியத்தொகையை கொடுத்து விட்டு பின் தனியாருக்கு ஏர்-இந்தியாவை தாரைவாருங்கள் என்றும் ஏர்-இந்தியா ஊழியர்கள் சங்கத்தினர் பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close