[X] Close
JUST IN
 • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
 • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
 • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்
 • BREAKING-NEWS ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!
 • BREAKING-NEWS வரும் 25 ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும்:வானிலை மையம்
 • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைகள் டெங்கு உயிரிழப்பு பற்றிய சான்றை தரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்தனர்
 • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
 • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
 • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
 • BREAKING-NEWS திரையரங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய டிக்கெட் கட்டணத்திற்கான அரசாணை வெளியீடு
வணிகம் 14 Jun, 2017 10:17 AM

"வர்லாம் வா.... வர்லாம் வா... நோக்கியா"

nokia-new-phones-launched

நோக்கியா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல வசதிகள் கொண்ட நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் வந்து குவியும் இந்த நேரத்திலும், நோக்கியா மொபைல்களுக்கு இந்தியப் பயனாளர்களிடம் வரவேற்பு தூக்கல்தான். ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நோக்கியா 3310 மாடலை இந்தியாவில் வெளியிட்டது. இந்நிலையில், ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம், இன்று நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய மூன்று ஸ்மார்ட்ஃபோன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மூன்று ஸ்மார்ட்ஃபோன்களும் 128 GB
எக்ஸ்பாண்டபிள் மெமரி கொண்டவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நோக்கியா 3, 4 மற்றும் 5 ஸ்மார்ட்ஃபோன்களையும் வெளியிட்டுப்பேசிய நோக்கியா இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் அஜய் மேத்தா, "நோக்கியா எப்போதும் மக்களின் பிராண்ட், தனித்துவமானது. நம்பிக்கைதான் நோக்கியாவின் ஆதாரம். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட்ஃபோன்கள் இதை உறுதிசெய்யும்" எனத் தெரிவித்தார்.

Nokia 3

5 இன்ச் டிஸ்ப்ளே, இருபக்கமும் 8 மெகா பிக்சல் கேமராக்கள், 2 GB RAM, 16 GB இன்டர்னல் மெமரி போன்ற வசதிகளுடன் இந்த மாடல் வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு நவ்கட் வெர்ஷனில் இயங்கும் இந்த மொபைல், 2630 mAh பேட்டரி திறன் கொண்டது. இந்த மாடல் வரும் 16-ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ரூ. 9,499/-

Nokia 5

5.2 இன்ச் டிஸ்ப்ளே, Qualcomm® Snapdragon™ 430 பிராஸசர், 2 GB RAM, 16 GB இன்டர்னல் மெமரி, 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின்பக்க கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு நவ்கட் வெர்ஷன், 3000 mAh பேட்டரித் திறன் போன்ற வசதிகளுடன் உள்ளன. கைரேகை சென்சார் இருப்பது இதன் கூடுதல் பலம். இந்த மொபைல் அடுத்த மாதம் 7-ம் தேதியில் இருந்து ப்ரி-புக்கிங் முறையில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 12,899/-

Nokia 6

3 GB RAM, 32 GB இன்டர்னல் மெமரி, Qualcomm® Snapdragon™ 430 பிராசசர், 16 மெகா பிக்சல் திறன் கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் திறன் கொண்ட முன்பக்க கேமரா போன்ற வசதிகள் உள்ளன. கைரேகை சென்சார் உடன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த மொபைலின் பேட்டரி திறன் 3000 mAh.அமேசான் தளத்தில் அடுத்த மாதம் 14-ம் தேதி நேரடியாக விற்பனை செய்யப்படவுள்ளது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும். இதன் விலை ரூ. 14,999/- கிண்டில் மின் புத்தகங்களில் 80 சதவிகிதம் வரை சலுகை கிடைக்கும். நோக்கியா 6 வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வோடஃபோன் நெட்வொர்க்கில், ஒரு மாதத்திற்கு 249 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகை, ஃபோன் வாங்கிய ஐந்து மாதங்கள் வரை பயன்பாட்டில் இருக்கும்.

தற்போது அறிமுகமாகியிருக்கும் இந்த நோக்கியா ஸ்மார்ட்ஃபோகள் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா பிராண்ட் மொபைல்கள் மற்றும் டேப்லட்டுகளை உலகளாவிய சந்தைகளில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு, ஹெச்.எம்.டி குளோபல் 10 ஆண்டுகளுக்கு உரிமம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close