[X] Close
JUST IN
 • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் மத்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கருத்துக் கேட்பு
 • BREAKING-NEWS ஓ. பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்திப்பு
 • BREAKING-NEWS ஷக்தி, ஜூலியை கார்னர் செய்யாதீர்கள்: ரசிகர்களுக்கு ஓவியா ரிக்வெஸ்ட்..!
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS டெல்லியில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
 • BREAKING-NEWS அரியலூர்: தத்தனூரில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் தடியடி
 • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 23 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
 • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி புதுச்சேரி விமான நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
 • BREAKING-NEWS தமிழகத்திற்கு நீட் தேர்வு விவகாரத்தில் நிரந்தர விலக்கு மட்டுமே தேவை: முத்தரசன்
 • BREAKING-NEWS இதுதான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சீக்ரெட்!
 • BREAKING-NEWS சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வணிகம் 05 May, 2017 04:11 PM

அசுர வளர்ச்சியில் பாபாராம்தேவ் நிறுவனம்... வருமானம் இரு மடங்கு உயர்வு

baba-ramdev-s-patanjali-company-s-revenue-doubles

பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் வருமானம் கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இரு மடங்காக உயர்ந்துள்ளது.

அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பதஞ்சலியின் உற்பத்திப் பொருட்கள் மிக வேகமாக விற்பனையாகும் பொருட்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது நெஸ்லே, கோத்ரேஜ், பிரிட்டானியா மற்றும் டாபர் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை விட பதஞ்சலி பொருட்கள் அதிக விற்பனையாகி வருகின்றன.

ஆயுர்வேத பொருட்கள் விற்பனையின் மூலம் பதஞ்சலி நிறுவனத்திற்கு 2016-17-ம் ஆண்டு ரூ. 10,216 கோடி வருமானம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்த நிறுவனம். இது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தை விட இரு மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 30,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இது குறைவு.

ஆனால் நெஸ்லே (ரூ 9519 கோடி), கோத்ரேஜ் (ரூ 9134 கோடி) ஆகிய நிறுவனங்களின் கடந்த வருட வருமானத்தை பதஞ்சலி இப்போது முந்தியுள்ளது. பதஞ்சலி நிறுவனம் தன்னுடைய பொருட்களின் விற்பனையை ரூ 20,000 கோடிக்கு எடுத்து செல்லும் முனைப்பில் உள்ளது. பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மற்றும் மூலிகை பொருட்கள், திவ்ய யோக மருந்தகங்கள், கிராம யோக நியாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது.

கடந்த வருடம் பதஞ்சலி நிறுவனத்திற்கு நெயின் (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்) விற்பனை மூலம் ரூ 1,467 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதே போல டான்ட் காட்தி பற்பசை (ரூ 940 கோடி), கேஷ் காட்தி ஷாம்பு (ரூ 825 கோடி), மூலிகை குளியல் சோப்பு (ரூ 574 கோடி ரூபாய்), கச்சி கானி கடுகு எண்ணெய் (ரூ 522 கோடி) ஆகியவையும் பெரும் அளவில் விற்பனையானது.

தற்போது, உள்நாட்டு ஷாம்பு சந்தையில் பதஞ்சலி 15 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. பற்பசையில் 14 சதவீத பங்கும், தேனில் 50 சதவீத பங்கும் இந்த நிறுவனத்தின் பொருட்களுக்கு உள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் அழகு மற்றும் அழகுசாதன பொருட்கள் சந்தையில் ‘சவுந்தர்யா’ என்ற பெயரில் பதஞ்சலி நிறுவனம் கால் பதித்தது. அந்த நிறுவனத்தின் முகம் கழுவும் கிரீம் 35 சதவீத பங்குகளை கைப்பற்றியுள்ளது.

இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட விற்பனை இலக்கை எட்ட மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், அசாம் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் ஐந்து புதிய உணவுப் பூங்காக்கள் தொடங்கவுள்ளது பதஞ்சலி. இதற்காக ரூ 5000 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா முதலிய அண்டை நாடுகள் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மத்திய பிரதேசத்தில் ஒரு உற்பத்தி ஆலை தொடங்கவிருக்கிறது பதஞ்சலி. தற்போது 1 லட்சம் பேரை வேலைக்கு பணியமர்த்தியுள்ள பதஞ்சலி நிறுவனம் அடுத்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 5 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனம் கூடிய விரைவில் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவை விட்டு விரட்டும் என பாபா ராம்தேவ் கூறியிருந்தார். “மற்ற வெளி நாட்டு நிறுவனங்களை போல இல்லாமல், பதஞ்சலி நிறுவனம் தனது முழு லாபத்தை கல்வி, ஆராய்சி, பசு பாதுகாப்பில் பயன்படுத்துகிறது. இந்த நிறுவனம் 125 கோடி இந்தியர்களுடையது” என்றார் பாபா ராம்தேவ்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close