[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை, நேரடி உர மானியம், புதிய பயிர் காப்பீட்டு திட்டம்: பட்ஜெட்டில் ஜெட்லியின் அறிவிப்புகள்

union-budget-2016-17-it-slabs-remain-unchanged

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான கடன் இலக்கு 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படுவது உட்பட விவசாயம் சார்ந்த அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

சமையல் எரிவாயு இணைப்பு

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனினும் முதல்முறையாக வீடு வாங்குவோர், வாடகை வீட்டில் வசிப்போர், 5 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் கொண்டவர்களுக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.5 கோடி ஏழைக்

குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

இது குறித்து ஜெட்லி கூறுகையில், ஏழைக் குடும்பங்களில் பெண்களின் பெயரில் எரிவாயு இணைப்பு வழங்கும் புதிய திட்டம் தொடங்க திட்டமிட்டிருக்கோம். இதற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளோம். இந்த நிதி ஆண்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு கோடியே 50 லட்சம் குடும்பம் இதன் மூலம் பயன்பெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு அதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றார்

‌வருமானத்தை மறைத்தால் 45% அபராதம்

வருமான விவரங்களை மறைத்தவர்கள் அதை அரசுக்கு தெரிவிக்க 4 மாத அவகாசம் வழங்கப்படும் என்றும் இவர்களுக்கு வரி மற்றும் அபராதமாக 45 சதவிகிதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெட்லி தெரிவித்தார். ஆதார் அமைப்புக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்படும் என்ற அவர் ஆதார் எண் அடிப்படையில் மானியம் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

உர மானியம்

உரங்களுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் குறித்து நிதியமைச்சர் அருண்ஜெட் கூறுகையில், மானியம் எரிவாயு இணைப்பு திட்டத்தில் நேரடியாக மானியம் வழங்கும் முறையை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும். இது வெற்றி பெற்றுள்ள நிலையில், உர மானியத்தையும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை அறிவிப்பதாகவும். விவசாயிகளுக்கு முறையான சேவையாற்றுவதை உறுதி செய்யும் வகையில் முதலில் சில மாவட்டங்களில் மட்டும் இது சோதனை செய்து பார்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விவசாயத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

2016-17 நிதியாண்டில் விவசாயத்திற்காக 35 ஆயிரத்து 984 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். நபார்டு திட்டத்தின் கீழ் பாசனத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்னும் 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்காகத் தனியே 412 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

விவசாயத்திற்கு முன்னுரிமை முன்னுரிமை

விவசாயத்திற்கு முன்னுரிமை முன்னுரிமை அளிப்பது குறித்து அருண் ஜெட்லி கூறுகையில், நம் நாட்டில் மழை அதிகமாகப் பெய்து பயிர்கள் விளையும் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் விளைச்சலை அதிகப்படுத்தும் பொருட்டு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் படி க்ருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் என்றார்.

புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு 5 ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close