[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
 • BREAKING-NEWS நிலவேம்பு கசாயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமலுக்கு அரசு சித்த மருத்துவர்கள் கண்டனம்
 • BREAKING-NEWS 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS தீபாவளி டாஸ்மாக் மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20%குறைந்தது
 • BREAKING-NEWS வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காகவே நிலவேம்பு கசாயம் குறித்து கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்: இல.கணேசன்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும்: தமிழிசை
 • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீரில் காலை 6.40 மணியளவில் நில அதிர்வு- ரிக்டர் அளவு கோலில் 4.7ஆக பதிவு
 • BREAKING-NEWS தஞ்சை மாவட்டத்தில் 34 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆட்சியர் அண்ணாதுரை
வணிகம் 07 Mar, 2017 07:56 AM

உயர்கிறது வங்கிச் சேவைகளுக்கான கட்டணங்கள்.. பொதுமக்கள் வேதனை

you-may-have-to-pay-more-for-cash-transactions

வங்கிச் சேவையை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் முனைப்பில் ம‌‌த்திய‌ அரசு உள்‌ள நிலையில்‌‌ மறுபுறம் வங்கிச் சேவைகளுக்கான கட்ட‌ணங்களும்‌ வேகமாக உயர்‌ந்து ‌வருகின்றன. வங்கி வாடிக்கையாளர்கள் தோள்களில் ‌தற்போது விழுந்துள்ள சுமைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

பாரத ‌ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு‌ வைத்துள்ள‌வர்கள் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் ரொக்க பணப்பரிமாற்றம் செய்தால் 50 ரூபாய் கட்டணம் மற்றும் சேவை வ‌ரி வசூலிக்கப்‌படும்‌ என தெரிவிக்கப்பட்டு‌ள்ளது‌. இது தவிர குறைந்த பட்ச கணக்கு ‌இருப்புத் தொகை இல்லாவிட்டால்‌ 100 ரூபாய் வரை அபராதம் மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் அட்டை வைத்துள்ளவர்களுக்கு அட்டையின் வகையை பொறுத்து ஆண்டுக்கு 125 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ மற்றும்‌ எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகளில் சேமிப்பு மற்றும் சம்பளக் கணக்கு வைத்துள்ளவர்கள் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் ரொக்கமாக ப‌ணப்பரிமாற்‌றம் செய்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு 150 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்‌து. ஆக்சிஸ் வங்கியும் இது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

பிற பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளும் கூட புதிய கட்டண விகிதங்களை அறிவிக்கும் எனத் தெரிகிறது. ரொக்க பணப்பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தி மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என வங்கிகள் தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரொக்க பணப்பரிமாற்றத்தை கட்டுப்படுத்த இது சரியான நடவடிக்கை அல்ல என்று அகில இந்திய வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close