[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை முந்திய இந்தியா

india-s-economy-surpasses-that-of-united-kingdom

பொருளாதார வளர்ச்சியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதவகையில் இங்கிலாந்தை இந்தியா முந்தியுள்ளது.

நூறு ஆண்டுகளாக இந்தியாவை, தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்து, சூரியன் மறையாத நாடு என்ற பெயர் பெற்றது. அந்த நாடு சமீபத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது. இது அந்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து பவுண்டின் மதிப்பு கடந்த 12 மாதங்களில் 20 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தவிர கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகம்.

இது போன்ற காரணங்களால் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை முந்தியுள்ளது. நடப்பு 2016ம் ஆண்டுக்கான இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு 2.29 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில், இந்தியாவின் ஜிடிபியின் மதிப்பு 2.30டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பொருளாதாரத்தை முந்தியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அடுத்து உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close