[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்படும் புதிய ரூபாய் நோட்டுகளை என்ன செய்கிறது மத்திய அரசு?...

seized-notes-are-being-put-into-circulation-right-away-to-meet-the-currency-demand-says-shaktikanta

நாடு முழுவதும் கைப்பற்றப்படும் கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் விளக்கமளித்துள்ளார்.

ரூபாய் நோட்டு விவாகரத்தில் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகவே பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக புதிதாக வெளியிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பலபகுதிகளிலும் கிடைப்பதில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் வருமானவரித்துறை நடத்திவரும் சோதனைகளில் கோடிக்கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதாக வெளியாகும் செய்திகள் சாமானியனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்றே கூறலாம். புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்து முழுமையாக 2 மாதங்கள் கூட ஆகாதநிலையில் நாடுமுழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 50 கோடிக்கும் அதிக மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு என்னாகிறது என்ற கேள்வி எழுந்தது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ், பணத்தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு சோதனைகளில் பறிமுதல் செய்யப்படும் ரூபாய் நோட்டுகள் உடனடியாக புழக்கத்தில் விடப்படுவதாகத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close