[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா? .. மத்திய அரசு விளக்கம்

government-not-mulling-december-30-cut-off-extension-for-cash-deposits

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கருப்புப்பணத்தின் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்:

கருப்புப்பணம் பதுக்கலைத் தடுக்கவும் மற்றும் கள்ளநோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கவும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் டிசம்பர் 30ம் தேதி வரை டெபாசிட் செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்தது.

வங்கிகளில் குவிந்த பணம் எவ்வளவு?:

இதையடுத்து நவம்பர் 10 முதல் பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் செலுத்தினர். இந்த வசதியைப் பயன்படுத்தி நவம்பர் 10ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.8,44,982 கோடி ரூபாய் வங்கிகளில் செலுத்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுவரை ரூ.33,948 கோடி மதிப்புள்ள செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றி உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து ரூ.2,16,617 கோடியை வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா?:

இந்தநிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கான காலஅவகாசம் டிசம்பர் 30ம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால், வங்கிகளில் போதிய அளவு ரூபாய் நோட்டுகள் கையிருப்பு உள்ளதாகவும் தனது பதிலில் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.100 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளின் விநியோகம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close