[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட்‌டா?... வருமான வரித்துறை நோட்டீஸ்

deposited-over-rs-2-5-lakh-income-tax-notice

செல்லாத ரூபாய் நோட்டு தொடர்பான அறிவிப்புக்குப் பிறகு வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பின் ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. செலுத்திய பணம் எந்த வகையில் வந்த வருமானம் என கேள்வி கேட்டுள்ள வருமான வரித்துறை, அதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் மூலம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்பவர்கள் என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான வரிக் கணக்கு நகலை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, நூற்றுக்கணக்கான தனியார் அறக்கட்டளைகள், மதரீதியான அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள வருமான வரித்துறை, நவம்பர் 8ஆம் தேதி வரையிலான நிதி இருப்பு விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close