[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

ரூ.50,000க்கு மேல் டெபாசிட்டுக்கு பான் கார்டு கட்டாயம்: விதிமுறையை கடைபிடிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

pan-card-compulsory-in-banks

வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யும்போது பான் கார்டு நகலை வழங்க வேண்டும் என்ற விதியை உறுதியாக கடைபிடிக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500. ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். இதையடுத்து தங்கள் கையில் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் பொதுமக்கள் டெபாசிட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு நகலை அளிக்க வேண்டியது அவசியம் ஆகும். இது தொடர்பாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் மீண்டும் வங்கிகளுக்கு பான் கார்டு நகலின் அவசியம் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது, அந்த அறிக்கையில், வருமான வரிச் சட்டத்தின்கீழ் இந்த விதிமுறையை வங்கிகள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் பான் கார்டை இணைத்திருப்பவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யும் போது பான் கார்டு நகலைப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. ரொக்க டெபாசிட் மட்டுமின்றி பான் கார்டு எண் தேவைப்படக்கூடிய மற்ற வங்கிப் பரிவர்த்தனைகளிலும் இந்த விதியினை கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close