[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
  • BREAKING-NEWS ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் வெள்ளிப் பதக்கம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்

ஸ்மார்ட்போன் விற்பனையில் 2ம் இடத்தில் 'லெனோவா மற்றும் மோட்டரோலா'

lenovo-motorola-now-no-2-smartphone-brand-in-india

லெனோவா நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் 32 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாக ஐடிசி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையில் லெனோவா மற்றும் மோட்டரோலா ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது.

லெனோவா நிறுவனம் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தில் மிக அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் தயாரித்து இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக ஐடிசி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆன்லைன் மூலம் இத்தகைய ஸ்மார்ட்போன் விற்பனையில் 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஐடிசி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கார்த்திக் இது குறித்து கூறுகையில், கடந்த ஆண்டு 2 கோடியே 91 லட்சம் அளவுக்குத்தான் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இதனை முறியடிக்கும் விதமாக தற்போது 3 கோடி அளவை தாண்டியுள்ளதாக தெரிவித்தார். லெனோவா மற்றும் மோட்டரோலா என இரண்டு நிறுவனமும் விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்று ஐடிசி ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போன்களில் சாம்சங் 23%, லெனோவா மற்றும் மோட்ட ரோலா 9.6%, மைக்ரோமேக்ஸ் 7.5% அளவுக்கு விற்பனை செய்துள்ளது. மேலும் ஜியோமி 7.4%, ரிலையன்ஸ் ஜியோ 7% சதவீத விற்பனையையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close