[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சில்லறை தட்டுப்பாடால் ஸ்தம்பித்தது வணிகம்: கவலையில் வணிகர்கள்

business-loss-in-tamilnadu

வார விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும் சென்னை தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறைவாக காணப்படுகிறது. சில்லறை தட்டுப்பாட்டால் தெருவோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதே போல், திருச்சியில் மிகவும் பரபரப்பாக காணப்படும் என்.எஸ்.பி சாலையிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வங்கிகளிலும் ஏ.டி.எம் மையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என திருச்சி பகுதி மக்கள் கூறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் செல்லாது என அறிவித்த பணத்தை கொடுத்ததால் வங்கிகளில் இரட்டிப்புக் கூட்டம் காணப்படுகிறது. வழக்கமாக வங்கி கணக்கில் மாத ஊதியத்தை செலுத்தும் பின்னலாடை நிறுவனங்கள் தற்போது 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக வழங்குவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், கணக்கில் வராத பணம் வெளிவருவதாகவும், இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. சில்லறை தட்டுப்பாட்டால் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் 4வது நாளாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close