[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கமாக மாற்றும் மக்கள்.. சவரனுக்கு ரூ.1,456 உயர்வு

gold-price-in-chennai

சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் அதிக அளவில் உயர்வு காணப்படுகிறது.

இந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றிரவு இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட உடனே, மக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏதுவாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் உள்ள தங்க நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதனால் நகைக் கடையில் விடிய விடிய தங்க நகை விற்பனை சூடு பிடித்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் அதிக உயர்வு காணப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.182 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,060-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்து ரூ.24,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் கிராமிற்கு ரூ.88 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3166-க்கு விற்பனையாகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close