[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

டாடா குழும தலைவர் ஆகிறாரா தமிழர்?

tamils-will-be-tata-leader

டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டியில் தமிழர்கள் இருவர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமையல் உப்பிலிருந்து சாஃப்ட்வேர் வரை தொழிற்துறையில் ஆழமாக கால் பதித்துள்ள டாடா குழும நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாயாகும்.

இத்தகைய டாடா குழுமத்தின் தலைவராக டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவருமான சுப்பிரமணியம் ராமதுரை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு பொறுப்பில் இருந்து இவர் கடந்த வாரம் ராஜினாமா செய்துள்ளது இந்த யூகங்களுக்கு வலிமை கூட்டியுள்ளது.

தற்போதைய டிசிஎஸ் தலைவராக இருக்கும் நடராஜன் சந்திரசேகரனும் போட்டியில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. டாடா குழுமத்திற்கு பொன் முட்டையிடும் வாத்தாக அதன் தகவல் தொழில் நுட்ப பிரிவான டிசிஎஸ் திகழ்கிறது. இந்நிறுவனத்தை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என்பதும் டாடா குழுமத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து அதன் தொழிற் பாரம்பரியத்தை ஆழமாக அறிந்தவர்கள் என்பதும் இவர்கள் இருவருக்கும் சாதகமான அம்சமாக உள்ளது.

டாடாவின் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் நிறுவன தலைவர் ரால்ஃப் ஸ்பெத், ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, பெப்சி குளிர்பான நிறுவனத் தலைவர் இந்திரா நூயி, வோடாஃபோன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அருண் சரீன் உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.

டாடா குழுமத் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்த்ரி அப்பொறுப்பில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார். அவருக்கு பதில் புதிய தலைவரை அடையாளம் காணும் பணியை ரத்தன் டாடா தலைமையிலான தேர்வுக் குழு ஈடுபட்டுள்ளது. பிரபல தமிழக தொழிலதிபரான வேணு ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 4 பேர் தேர்வுக்குழுவில் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close