[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

எந்த பொருளுக்கு எவ்வளவு வரி?...இன்று இறுதி செய்ய வாய்ப்பு

2-day-council-meets-today

சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் மற்ற மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்கின்றனர். ஜிஎஸ்டி வரி விகிதங்களை 8,12,18,26 ஆகிய 4 அளவுகளில் நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள், குளிர்பானங்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களுக்கு மிக அதிகபட்சமாக 26 சதவிகித வரி விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் புகையிலை பொருட்களுக்கு இன்னும் அதிகமாக அதாவது 40 சதவிகி‌ம் என்ற அளவுக்கு வரி விதிக்க அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜி.எஸ்.டி வரி விவகாரத்தில் தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படாமல் கருத்துக்கள் முன் வைக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close