[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: டாடா குழுமத்துக்கு எதிராக மிஸ்த்ரி வழக்கு

cyrus-mistry-challenge-sacking-in-bombay-hc

டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரி, டாடா குழுமத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். பதவி நீக்கத்துக்கு மிஸ்த்ரி நீதிமன்றத் தடை பெறுவதைத் தடுக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் டாடா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மிஸ்த்ரியின் சார்பாக மும்‌பை நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாடா குழுமம், டாடா அறக்கட்டளைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், டாடா குழுமத்தின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றுள்ள ரத்தன் டாடா மீதும் சைரஸ் மிஸ்த்ரி வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை டாடா குழுமத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திலும் மிஸ்த்ரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே, பதவி நீக்கத்துக்கு எதிராக மிஸ்த்ரி தடை பெறுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் டாடா குழுமத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close