[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

நான்கு அடுக்கு வரி விகிதம்..ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை

four-tier-gst-structure-proposed-low-of-6-per-cent-to-high-of-26-per-cent-extra-on-luxury-goods

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 6,12,18 மற்றும் 26 சதவீதம் என நான்கு அடுக்கு விகிதத்தில் அமல்படுத்துவது குறித்து டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் தமிழகம் உட்பட, அனைத்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மாநிலங்களின் வருவாய் 2015-16ம் ஆண்டு வருவாயை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஜிஎஸ்டி மசோதாவை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாக கூட்டத்தில் ஒத்த கருத்து எட்டப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் முதல் 5 வருடங்களில் மாநிலத்தின் வருவாயைக் கணக்கிட ஆண்டுக்கு 14 சதவீத வளர்ச்சி இருப்பதாக கருதப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. குறைவாக வருவாய் ஈட்டும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பணவீக்கத்தை கட்டுப்பாட்டில் வைக்க உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம் என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. புகையிலை, சிகரெட், ஆடம்பரக் கார்கள் உள்ளிட்டவைகளுக்கு அதிகபட்சமாக 26 சதவீத வரி விதிப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டம் 3 நாட்களுக்கு நடக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close