[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனைக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

union-cabinet-approves-ethanol-based-petrol

எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டன. குறிப்பாக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு பலமடங்கு உயர்ந்து இருப்பதால் அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் அன்னிய செலவாணி அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த எத்தனால் எனும் வேதிப்பொருளை பெட்ரோலில் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதே போல‌ ஜம்முவில் ஐஐஎம் தொடங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா ரஷ்யா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று மாலை கூடுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. நிதி ஆண்டை கருத்தில் கொண்டு பட்ஜெட் கூட்டத்தொடரை முன் கூட்டியே தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதால், குளிர்கால கூட்டத் தொடரும் வழக்கத்துக்கு மாறாக நவம்பர் இரண்டாம் வாரத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close