[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஜி.எஸ்.டி மசோதா எதற்காக ?

gst-bill-for-what

பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி.

இதன் நோக்கம் மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டுவருவதே.
உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தையில் விற்கும்போது அதன்மீது கலால் வரி, சேவை வரி, அந்தப் பொருட்களை வர்த்தகத்துக்காக மற்றொரு மாநிலத்துக்குக் கொண்டு செல்லும்போது செலுத்தும் நுழைவு வரி, மதிப்புக் கூட்டு வரி என பல வரிகள் விதிக்கப்படுகின்றன.

அதேபோல, பொருட்களை இறக்குமதி செய்தால், அவற்றின்மீது சுங்க வரி விதிக்கப்படுகிறது. இதுபோல் ஒவ்வொரு மாநிலமும் உற்பத்தி செய்யும் பொருட்கள்மீதும், இறக்குமதி செய்யும் பொருட்களின்மீதும் வரி மேல் வரி விதித்து வரிக் கட்டமைப்பை சீர்குலைப்பதாலும், இது பொதுமக்களுக்கு வரிச் சுமையை ஏற்படுத்துவதாலும், இது பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படுத்துவதால் அனைத்து மறைமுக வரியையும் ஒரே வரியாக்க வேண்டும் என்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close