நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் 7.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவாகும். மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் இது தெரியவந்துள்ளது.
விவசாயம், கட்டுமானத் துறை,சுரங்கம் ஆகிய துறைகளில் உற்பத்தி கணிசமாக குறைந்ததே ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைய காரணம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. எனினும் பருவமழையின் அளவு திருப்திகரமாக இருப்பதும் 7வது ஊதியக் குழு அறிக்கை அமலாக்கமும் இந்த நிதியாண்டில் வளர்ச்சி விகிதத்தை 8 சதவிகிதம் என்ற அளவுக்கு இட்டுச் செல்லும் என நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மத்திய அரசின் கடன் 58 லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?